இதுதான் உங்க டுவிஸ்ட்டா? கருணாஸை கலாய்த்த பாக்யராஜ் மகன்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கருணாஸ், பாக்யராஜ் கூறிய ஒரு கருத்தை திரித்து பெரிதாக்கியதாக பாக்யராஜ் மகன் சாந்தனு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளர். அவர் கூறியதாவது:

‘இவரு சொன்னதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்னங்கய்யா சம்மந்தம்? டுவிஸ்ட்டுன்னு பண்றிங்களே சார். நன்கு நாட்களுக்க்கு முன்பு கூட என்னிடம் நீங்கள் பேசியபோது என்னுடைய தந்தை குறித்து ரொம்ப பெருமையாக கூறினீர்களே! ஆனால் தேர்தல் என்று வந்தபின்னர் அவர் கூறியதை ஓட்டுக்காக திரித்து பேசுகின்றீர்களே.. எல்லாம் ஓட்டுக்காகவா? நமது உறவு தேர்தல், அரசியலையும் தாண்டியது சார்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் பாக்யராஜ் இயல்பாக பேசிய ஒன்றை அரசியல்வாதி போல் பாண்டவர் அணியினர் தேர்தல் லாபத்திற்காக பெரிதாக்குவதாக கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply