shadow

இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் விளையாட கூடிய டாப் கேம்கள்

ஓய்வு நேரம் கிடைக்கும் போது ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுவது நிறைய பேருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இண்டர்நெட் இல்லாமல் விளையாட கூடிய டாப் கேம்களை இங்கு பார்ப்போம்.

இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் விளையாட கூடிய டாப் கேம்கள்
புதுடெல்லி:

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களில் கேம் விளையாடுவதும் ஒன்று. இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் கேம்களை விளையாட ஏதுவாக சக்திவாய்ந்ததாக இருக்கின்றது. எனினும் சில சமயங்களில் இண்டர்நெட் இணைப்பு கோளாறு ஏற்பட்டு கேம் பாதியில் நின்று விடும். இவ்வாறு பாதியில் கேம் தடைபடும் போது பலருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

இன்று இண்டர்நெட் வேகம் சீராக இருந்தாலும் இண்டர்நெட் பயன்படுத்தி கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் தீர்ந்து போகும். இங்கு இண்டர்நெட் பயன்படுத்தமால் அதே சமயம் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் டாப் கேம்களை பற்றி இங்கு பார்ப்போம்.

டெம்பில் ரன் (Temple Run):

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டெம்பில் ரன் மிகவும் பிரபலமான கேம் ஆகும். இண்டர்நெட் இன்றி கிடைக்கும் இந்த கேம் பல்வேறு நிலைகளை கொண்டுள்ளது. இத்துடன் பல்வேறு தீம்களும் இருப்பதால் விளையாட்டு மேலும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சப்வே சர்ஃபர்ஸ் (Subway Surfers):

டெம்பில் ரன் போன்றே சப்வே சர்ஃபர்ஸ் கேமும் அதிக சுவார்ஸ்யமாக இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்களில் ஒன்றாக சப்வே சர்ஃபர்ஸ் இருக்கிறது. இதில் உங்களை துரத்தி வரும் காவல் துறையிடம் இருந்து தப்பித்து செல்வதை கேமாக உருவாக்கியுள்ளனர்.

பேட்லேண்ட் (Badland):

இது சாகச கேம் எனலாம். இருள் நிறைந்த காட்டு பகுதியில் நடக்கும் இந்த கேமில் காடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. அதிகபட்சம் நான்கு பேர் ஒரே நேரத்தில் மல்டி பிளேயர் முறையில் இந்த கேமினை விளையாட முடியும். மொத்தம் 23 நிலைகள் இருக்கும் இந்த கேமில் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கிறது.

ஃப்ரூட் நின்ஜா (Fruit Ninja):

உங்களது விரல்களுக்கு வேலை கொடுக்கும் இந்த கேம் திரையில் தோன்றும் பழ வகைகளை வெட்ட வேண்டும். நடுவே உங்களை குழப்ப வெடி குண்டுகளும் திரையில் தோன்றும். இதனால் வேகமாக பழங்களை மட்டும் வெட்டி பாயிண்ட்களை குவிக்க முடியும்.

ஆஸ்ஃபால்ட் 8: ஏர்பார்ன் (Asphalt 8: Airborne):

அதிக சுவாரஸ்யமான ரேசிங் கேமாக ஆஸ்ஃபால்ட் 8 இருக்கிறது. ஆண்ட்ராய்டு மட்டுமின்றி பல்வேறு இயங்குதளங்களில் இந்த கேம் கிடைக்கின்றது. அதிக மெமரி கொண்ட இந்த கேமிற்கு அடிக்கடி அப்டேட்கள் வழங்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply