இணைய பயன்பாடு: உலகிலேயே 2வது இடத்தை பிடித்தது இந்தியா!

உலகளவில் இணையப்பயன்பாட்டில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இணையத்தின் பயன்பாடு குறித்து ஆய்வை நடத்தி வரும் மேரி மீகர் என்ற நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு உலக அளவில் அதிகமாக இணையத்தை பயன்படுத்திய நாடுகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் உலகின் மொத்த இணையப் பயனாளர்கள் 380 கோடி பேர் உள்ளதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் என்றும், இதே பயன்பாடு உலகளவில் 2017-ம் ஆண்டு 49 சதவீதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உலகளவில் சீனா 21 சதவீத இணையப் பயனாளர்களுடன் முதலிடத்திலும், 12 சதவீத இணையப் பயனாளர்களுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 8 சதவீத இணையப் பயனாளர்களுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

Leave a Reply