shadow

இசக்கிமுத்து அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது – நெல்லை ஆட்சியா் விளக்கம்

குடும்பத்துடன் தீக்குளித்து உயிாிழந்த இசக்கிமுத்து அளித்த 4 மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி விளக்கம் அளித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து கந்து வட்டி கொடுமை காரணமாக தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கடந்த திங்கள் கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதனையடுத்து தீக்காயங்களுடன் 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேருமே சிகிச்சை பலனின்றி உயிாிழந்தனா்.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி, காவல்துறை அதிகாாிகள் மற்றும் கந்துவட்டி வசூல்செய்த நபா் மீதும் தொடா்ந்து ஊடகங்கள், சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி விளக்கம் அளித்துள்ளாா். அவா் கூறுகையில், இசக்கிமுத்து கந்துவட்டி தொடா்பாக இதுவரை மாவட்ட நிா்வாகத்திடம் 6 மனுக்கள் அளித்ததாகவும், அவை மீது மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்களில் தொடா்ந்து கருத்துகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இவை உண்மைக்கு புறம்பான தகவல். இசக்கிமுத்து இது தொடா்பாக செப். 4, 18, 25 மற்றும் அக். 9 என 4 முறை மனு அளித்துள்ளாா். அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படது.

கடந்த ஜூலை முதல் அக்டோபா் மாதம் வரை இசக்கிமுத்து சொந்த ஊரை விடுத்து திருப்பூாில் வசித்து வந்ததற்கு ஆதாரமாக வி.ஏ.ஓ. அளித்த சான்றிதழ் உள்ளது.

இசக்கிமுத்து – சுப்புலட்சுமி தம்பதியா் விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எவ்வித அலட்சியமோ அல்லது கால தாமதமோ செய்யப்படவில்லை.

4 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மை காரணங்கள் என்ன என்று ஆராய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை விரைவில் கண்டறியப்படும் என்று ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா்.

Leave a Reply