shadow

இங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளதால் அந்நாட்டு பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்த வரைவு ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் நேற்று 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாகா ‘பிரிக்ஸிட்’ துறையை கவனித்து வந்த அமைச்சார் டொமினிக் ராப், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை லண்டனில் நேற்று அவர் வெளியிட்டபோது, “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஆதரிக்க என் மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை” என கூறினார்.

மேலும் வடக்கு அயர்லாந்துக்கான மந்திரியான இந்திய வம்சாவளி சைலேஷ் வாரா, ‘பிரிக்ஸிட்’ துறை ராஜாங்க மந்திரி சூயல்லா, பணியாளர், ஓய்வூதிய துறை மந்திரி எஸ்தர் மெக்வே ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இதன் காரணமாக பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.

Leave a Reply