shadow

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை: முற்றிலும் நாசமான விளைநிலங்கள்

ஒருபக்கம் அமெரிக்காவில் வரலாறு காணாத பனி பொழிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அந்நாட்டு மக்களின் இயல்பு நிலை பெருமளவில் பாதித்துள்ளது

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அந்நாடே வெள்ளத்தில் மிதப்பதைப்போன்று காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த பலத்த மழையால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளை நிலங்கள் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ள மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply