shadow

ஆழமான காயமா? ஒரே நிமிடத்தில் குணமாக்கும் பசை கண்டுபிடிப்பு

விபத்து அல்லது போர் நேரங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் அதிகம் வீணாகுவதோடு, காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு அதை ஆற்றுவதற்கு மாதக்கணக்கில் ஆகும். ஆனால் சிட்னி மற்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூட்டாக கண்டுபிடித்துள்ள புதிய மருந்தால் இனி ஆழமான காயங்களை ஒரே ஒரு நிமிடத்திற்குள் ஆற்றி வைக்க முடியும்

ஆம், இந்த ஆய்வாளர்கள் மிட்ரோ என்ற பசையை கண்டுபிடித்துள்ளனர். இந்த பசை விரிந்து, சுருங்கும் எலாஸ்ட்டிக் போன்ற தன்மையுள்ள இந்த பசை, களிம்பு போல திசுக்களுடன் படிந்து, உள்காயத்தை ஆற்றும் மருந்தாகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. எலி மற்றும் பன்றிகளுக்கு சோதனை செய்து வெற்றி பெற்ற நிலையில் மிக விரைவில் மனிதர்களுக்கும் இந்த பசையை சோதனை செய்யவுள்ளனர்.

மனிதர்களின் சோதனையில் வெற்றி கிடைத்தால் பெரும் விபத்துகள் மற்றும் போர்முனைகளில் ஏற்படும் காயங்களில் ஏற்பட்டும் ரத்தப்போக்கை தடுக்கவும், காயங்களை ஆற்றவும் இந்த ’மீட்ரோ’ கைமேல் நிவாரணமாகவும் கண்கண்ட மருந்தாகவும் இருக்கும். இதன்மூலம், அவசர சிகிச்சை கிடைக்காமல் பலியாகும் பல உயிர்களை காப்பாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply