shadow

ஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தற்போது தமிழக ஆளுனரின் கையில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, ’27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்துவிட்டனர், அவர்களை விடுதலை செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.

ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தானாகவே முடிவெடுக்கலாம்; ஆளுநர் முடிவெடுக்க எந்த காலக்கெடுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஆளுனரின் முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Leave a Reply