ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு தயாரிப்பில் அவருடைய உதவியாளர் சரவணராஜன் இயக்கியுள்ள ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான் ஏப்ரல் 12 என்று அறிவித்துள்ள வெங்கட்பிரபு, ‘ ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று வாக்களிக்க தயாராக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
வைபவ், சனா அல்தாப், இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.