ஆர்யாவின் மகாமுனி படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி!
நடிகர் ஆர்யா கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் திரைப்படம் காப்பான். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது
இந்த நிலையில் ஆர்யா நடித்த இன்னொரு திரைப்படமான ‘மகாமுனி’ திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று சென்சாருக்கு சென்ற நிலையில் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்
ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ‘மெளனகுரு’ என்ற திகில் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.