shadow

ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்த முதல்வர்

இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய கிளம்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு திருச்சி திரும்பினார். இந்த முடிவுக்கு டெல்டா பகுதியில் பெய்து வரும் கனமழையே காரணம் என கூறப்படுகிறது.

இந்த கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மழை நின்றது மீண்டும் பயணத்தை தொடர்வாரா? அல்லது முதல்வர் சென்னை திரும்பவுள்ளாரா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

முன்னதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனா். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையையும் வழங்கினா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply