shadow

ஆய்வு பணியை தடுத்தால் 7 வருடங்கள் சிறை: ஸ்டாலினுக்கு கவர்னர் மிரட்டலா?

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் அடிக்கடி ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஆய்வுப்பணியை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று கவர்னர் அலுவலகத்தில் இருந்து வெளிவந்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுப்பணியை கடுமையாக எதிர்த்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

கவர்னரின் இந்த மறைமுக எச்சரிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் கூறியதாவது: அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய முயன்றிருக்கிறார் ஆளுநர்; மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடும். அரசு அதிகாரிகளை கூட்டி ஆய்வு நடத்துவதற்குதான் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது

மேலும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை “ஆய்வு” என்ற பெயரில் செய்து அரசியல் ரீதியாக உதவுவதையும், இந்த ஆய்வு பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அரசியலுக்காக நடப்பது என்ற அடிப்படை உண்மையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply