shadow

ஆப்பிள் ஐபோன் X வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக அறிவிக்கப்பட்ட ஃபேஸ் ஐடி, ஆப்பிள் அறிவித்த அளவு பாதுகாப்பு வழங்காதது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் ஃபேஸ் ஐடி அங்கீகார முறையை 3D முறையில் பிரின்ட் செய்யப்பட்ட முகமூடி முட்டாளாக்கியுள்ளது. வியட்நாமை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய முகமூடி ஆப்பிள் ஃபேஸ் ஐடியை ஏமாற்றி போனினை அன்லாக் செய்துள்ளது.

ஐபோன் X ஸ்மாபர்ட்போனின் மிக முக்கிய அம்சமாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஆப்பிள் ஃபேஸ் ஐடி மனிதர்களின் நிஜ முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக நுட்பமாக கண்டறியும் திறன் கொண்டுள்ளது என ஆப்பிள் நிறுவன மூத்த துணை தலைவர் ஃபில் ஸ்கில்லர் தெரிவித்திருந்தார்.

வியாட்நாமை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான காவ் 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,810) செலவில் முகமூடி ஒன்றை உருவாக்கி ஆப்பிள் ஃபேஸ் ஐடியை முறியடித்துள்ளது. மற்ற பாகங்கள் 2D பிரின்டிங் மூலம் உருவாக்கப்பட்ட நிலையில் மூக்கு மட்டும் வரைபட கலைஞரால் உருவாக்கப்பட்டது. இத்துடன் முகத்திற்கான தோல் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவை ஏமாற்றுவதற்கு ஏற்ப கைகளாலேயே உருவாக்கப்பட்டது.

3D பிரின்டிங், மேக்கப் மற்றும் 2D படங்களை ஒன்றிணைத்து முகமூடி உருவாக்கப்பட்டுள்ளது. முகத்தில் உள்ள கன்னம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நிலையில், மற்ற பகுதிகள் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டதாக காவ் சைபர் செக்யூரிட்டி துணை தலைவர் கோ டுவான் அன் தெரிவித்தார்.

இந்த வழிமுறை நாங்கள் எதிர்பார்த்த அளவு கடினமாக இல்லை என காவ் தெரிவித்துள்ளார். ஆப்பிள் ஃபேஸ் ஐடி பாதுகாப்பு எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கும் வீடியோவினை காவ் செக்யூரிட்டி வல்லுநர்கள் யூடியூபில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ஆப்பிள் புதிய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு அம்சம் கிடையாது என்பதை 2008-ம் ஆண்டிலேயே காவ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் ஃபேஸ் ஐடியை முறியடிக்க முயன்று தோல்வியை சந்தித்தன.

ஆப்பிள் ஃபேஸ் ஐடி வாடிக்கையாளர்களின் முகத்தில் உள்ள 30,000க்கும் அதிகமான IR புள்ளிகளை வைத்து, வாடிக்கையாளர்கள் ஐபோன் X ஸ்மார்ச்போனை பார்த்தால் மட்டுமே அன்லாக் ஆகும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் புகைப்படம் அல்லது முகமூடி கொண்டு ஃபேஸ் ஐடியை ஏமாற்ற முடியாது என ஆப்பிள் தெரிவித்திருந்தது.

மேலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பமானது ட்ரூ டெப்த் கேமரா, இன்ஃப்ராரெட் கேமரா மற்றும் ஃபிளட் இலுமினேட்ட உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் A11 பயோனிக் சிப் மூலம் முகத்தை மிக துல்லியமாக அறிந்து கொள்ளும்.

ஆப்பிள் ஃபேஸ் ஐடி எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,

Leave a Reply