shadow

ஆப்பிள் ஐபேடில் வாட்ஸ் அப்-ஐ செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்?

whatsapp_2215218fஉலகம் முழுவதும் இன்று வாட்ஸ் அப் உலகமாக மாறிவிட்டது. முதலில் சாதாரண விஷயமாக அறிமுகமான வாட்ஸ் அப் தற்போது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது. இதன் அபார வளர்ச்சி காரணமாக வாட்ஸ் அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்துவோர் 700 மில்லியன் பேர்கள் என்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாத கணக்கெடுப்பின்படி இதன் பயனாளர்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப் பயனாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது.

தற்போது வாட்ஸ் அப் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் ஐபோன்கள், விண்டோஸ் போன்கள் ஆகியவைகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் மேக் மற்றும் டெக்ஸ்டாப் பிசிக்களிலும் வாட்ஸ் அப் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆப்பிள் ஐபேடில் வாட்ஸ் அப் செயல்படும் முறை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனாலும் நீங்கள் ஆப்பிள் ஐபேடு வைத்திருந்தால் அதில் வாட்ஸ் அப்-ஐ எப்படி செயல்படுத்துவது என்ற வழியை உங்களுக்கு நாங்கள் இப்போது சொல்லி கொடுக்கின்றோம்./

ஸ்டெப் 1: முதலில் சஃபாரி பிரெளசர் ஓபன் செய்ய வேண்டும்:

வாட்ஸ் அப்-ஐ உங்கள் ஆப்பிள் ஐபேடில் செயல்பட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் சஃபாரி பிரெளசரை ஓபன் செய்ய வேண்டும். ஒருவேளை உங்கள் ஐபேட்டில் சஃபாரி பிரெளசர் இல்லை என்றால் அதை டவுண்லோடு இன்ஸ்டால் செய்து அதன் பின்னர் ஒப்பன் செய்யவும்.

ஸ்டெப் 2: சபாஃரி பிரெளசரி சியர்ச்சிங் பகுதிக்கு சென்று அதில் web.WhatsApp.com என்று டைப் செய்யுங்கள். நீங்கள் உடனே வாட்ஸ் அப்-ன் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்

ஸ்டெப் 3: உங்கள் ஆப்பிள் ஐபேடில் வாட்ஸ் அப்பின் டெஸ்க்டாப் வெர்ஷன் உங்களுக்கு தேவை என்றால் உங்கள் ஐபேடில் வலது மேல் புறம் உள்ள ரெப்ரஷ் பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள். உங்களுக்கு டெஸ்க்டாப் வெர்ஷன் பட்டன் தோன்றும். பின்னர் அதை க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 4: QR கோட்-ஐ ஸ்கேன் செய்யவும்:

இதை நீங்கள் செய்து முடித்தவுடன் உங்கள் ஸ்க்ரீனில் QR கோட் தோன்றும். இந்த கோட்-ஐ உங்கள் ஆப்பிள் ஐபேட் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5: நீங்கள் மேற்கண்ட வழிகளை சரியாக ஃபாலோ செய்தீர்கள் என்றால் உங்கள் ஆப்பிள் ஐபேடில் தற்போது வாட்ஸ் அப் செயலுக்கு வந்துவிடும். அதன் பின்னர் வாட்ஸ் அப்பில் உங்களுடைய காண்டக்ட்களிடம் தொடர்பு கொண்டு சேட்டிங் செய்யுங்கள்.

Leave a Reply