ஆந்திராவில் முழு மதுவிலக்கு: ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி திட்டம்

ஆந்திராவில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது முதல் கையெழுத்தாக மதுவிலக்கை படிப்படியாக குறைப்பது குறித்த கோப்பில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரே ஓராண்டுக்குள் ஆந்திராவை முன்னணி மாநிலமாக மாற்ற உறுதிபூண்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆந்திராவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து நடப்பு ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்றும், முழு மதுவிலக்கு இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு ஆண்டும் கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் மது விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply