shadow

ஆதார் தகவலை திருடமுடியுமா? டிராய் தலைவரின் சவால் முறியடிப்பு

ஆதார் விவரங்கள் பாதுகாப்பானது என்றும், முடிந்தால் எப்படி தவறாக பயன்படுத்த முடியும் என நிரூபித்து காட்டுமாறு, டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா விடுத்தார். ஆனால் அந்த சவாலில் அவர் தற்போது தோற்றுப் போயுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் டிராய் தலைவர் தனது ஆதார் எண்ணை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த எண்ணை யாராவது தவறாக பயன்படுத்தி, தனது தகவல்களை திருட முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு டுவிட்டர் பயனாளி அவரது ஆதார் எண்ணை கொண்டு, அவருடைய முழு விவரங்களையும், மாற்று செல்போன் எண் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த ஒருவர், எலியட் ஆல்டர்சன் என்ற புனைப்பெயரில், டிராய் தலைவரின் சவாலை அந்த நபர் முறியடித்துள்ளார். தங்கள் பிறந்ததேதி, மாற்று செல்போன் எண், இருப்பிட முகவரி ஆகிவற்றை மட்டுமே வெளியிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், ஆதார் எண்ணை வெளிப்படையாக கூறுவது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதை மெய்பித்துக்காட்டுவதற்காகவே, தங்கள் தகவல்களை வெளியிட்டதாகவும், எலியட் ஆல்டர்சன் என்ற புனைப்பெயரில் சவாலை முறியடித்துள்ளவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஆதார் எண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

Leave a Reply