shadow

ஆதார் அட்டை கட்டாயமில்லை. சுப்ரீம் கோர்ட் மீண்டும் திட்டவட்டம்
Aadhar-Card-400x226
இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அரசு ஒருபுறமும், கட்டாயமில்லை என்று நீதிமன்றம் ஒருபுறமும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரையில், அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டைக் கட்டாயமில்லை என்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரிய மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து முடிவுக்கு வரும் வரையில், விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆதார் எண் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதார் எண்ணை கட்டாயப் படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே சமயம் 100 நாட்கள் வேலைத் திட்டம், அனைத்து வகையான ஓய்வூதியத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டம், பிரதமரின் ஜன் தன் யோஜனா என்று 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆதார் அட்டை குறித்து நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை பொதுமக்களும், மத்திய அரசும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply