shadow

ஆதார் அட்டையை ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை

செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தற்போது எச்சரித்துள்ளது.

 

Leave a Reply