shadow

ஆணுறை விளம்பரத்தில் நடித்தது ஏன்? பிரபல நடிகை விளக்கம்

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் முன்னனி நடிகர் ரன்வீர் சிங் உள்பட பலர் ஆணுறை விளம்பரத்தில் நடித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்றள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தும் ஆணுறை விளம்பரத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ராக்கி சாவந்த் நடித்துள்ள இந்த ஆணுறை விளம்பரத்தின் ஸ்டில் ஒன்று ஆபாசத்தின் உச்சகட்டமாக உள்ளது. அவரது உடலின் மேல்பகுதியில் மட்டும் ரோஸ் நிற உடையணிந்து நடித்துள்ள படுகவர்ச்சியான இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் இந்த விளம்பரத்தில் தான் நடித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்த ராக்கி சாவந்த், பொதுமக்களுக்கு ஆணுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூகத்திற்கு சேவை செய்யவே தான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன். பணம் எனக்கு இரண்டாம்பட்சமே என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply