ஆட்டோ, கார் சேவையை அடுத்து ஹெலிகாப்டர் சேவை: உபேர் அசத்தல் ஐடியா!

ஆட்டோ, டாக்ஸி சேவையை வழங்கி வரும் உபேர் நிறுவனம் அடுத்தகட்டமாக ஹெலிகாப்டர் சேவையை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்துத்துறையின் அடுத்தகட்டமாக விளங்கும் உபேர் நிறுவனத்தின் இந்த ஹெலிகாப்டர் சேவை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த உபேர் நிறுவனம், போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டர் சேவையை சமீபத்தில் தொடங்கியது. கார் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்வதை விட ஹெலிகாப்டரில் பயணம் செய்ய கட்டணம் சற்றே அதிகம் என்றாலும் அவசர நேரத்தில் உடனடியாக செல்ல வேண்டிய நேரத்தில் செல்ல முடிகிறது என்பதால் இந்த ஹெலிகாப்டர் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் சேவை அமெரிக்காவில் முதற்கட்டமாக விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கப்படும் என்றும், உபேர் ஹெலிகாப்டர்கள் மன்ஹாட்டன் நகரின் டவுன்டவுன் என்ற இடத்தில் இருந்து ஜான் எஃப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு எட்டே நிமிடங்களில் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருவதாகவும் உபேர் தெரிவித்துள்ளது. இதே வழித்தடத்தில் காரில் சென்றால் ஒருமணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்கா உள்பட இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது

Leave a Reply