shadow

ஆடுகள், மாடுகளுடன் செல்பி எடுக்க தடை: உபி அரசு அதிரடி அறிவிப்பு

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஆடுகள், மாடுகளை பொது இடங்களில் பலியிடக் கூடாது என்றும், பலியிடப்படும் ஆடுகள் மாடுகளுடன் செல்பி எடுக்க கூடாது என்றும் உத்தரப் பிரதேச அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள், மாடுகள் பலியிடப்படுவது வழக்கம். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், உத்தரப் பிரதேச அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகூறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர்களை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகளை பொது இடங்களில் பலியிடக்கூடாது. பலியிடும் முன்பு ஆடுகள், மாடுகளுடன் செல்ஃபி எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் போக்கு சில ஆண்டுளாக உள்ளது.

இதற்கு அனுமதி அளிக்க முடியாது. அதுபோலவே விலங்குகளை பலியிடும் கோரக் காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிடக்கூடாது. பக்ரீத் பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply