ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: அரசின் முக்கிய அரசாணை

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் ஓரிடத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசியர்கள் சங்கம் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள குறைந்தபட்சம் ஓரிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்த பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கண்பார்வை அற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடலில் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் ஆகியோருக்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply