shadow

ஆகஸ்ட் 31ல் ரிலீஸ் ஆகும் ‘நரகாசுரன்’

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்துவிட்டாலும், இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் கவுதம் மேனன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ரிலீஸ் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து கவுதம் மேனன் விலகி கொள்ள தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக ஆகஸ்ட் 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்தசாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply