shadow

ஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு: தலைவர் தேர்வு செய்யப்படுவாரா?

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் வரும் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் திமுகவின் செயற்குழு கூட்டம் கூடி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இதில், கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக்குழு கூட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் செல்வி, மு.க.தமிழரசு, துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் அருள்நிதி ஆகியோரும் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

Leave a Reply