shadow

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் புகழ்பெற்றவர் அஸ்வினுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அஸ்வின் ஏற்கனவே கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஓகே கண்மணி, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜுலை காற்றில் உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.

தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் அஸ்வின். சிவாங்கி, புகழ் ஆகியோரும் காமெடி ரோலில் நடிக்க பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளனர். தெலுங்கில் Meet Cute என்ற வெப்சீரிஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.இந்த வெப்சீரிஸில் அஸ்வினுக்கு ஜோடியாக 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார்களாம்.
விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம்.