அருள்நிதி படத்தில் நடிக்கும் ஆபாச பட இயக்குனர்

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத் நடித்து வரும் திரைப்படம் ‘K13’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆதிக் கேரக்டர்தான் இந்த படத்தின் கதையின் மையப்புள்ளி என்று என்று கூறிய இயக்குனர் பரத் கூறியபோது, ‘இந்த கேரக்டரை நான் எழுதும்போதே என் மனதில் தோன்றியவர் இயக்குனர் ஆதிக் தான் மட்டுமே என்று கூறினார்.

மேலும் ஆதிக் ஏற்கனவே அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு பின் தற்போது அவர் இன்னொரு படத்தை இயக்கும் பணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply