அருள்நிதி-ஜீவா படத்தின் டைட்டில் இதுதான்

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்து நடிப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. அந்த வகையில் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ராஜசேகர் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கரும் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘களத்தில் சந்திப்போம்’ என்று டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply