அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு ராஜ்கிரணின் சவுக்கடி!

எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் ஏற்கனவே கட்சி ஆரம்பித்துவிட்டனர். ரஜினி உள்பட இன்னும் ஒருசில நடிகர்கள் கட்சி ஆரம்பிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறிய அறிவுரை பின்வருமாறு:

எல்லா அரசியல் கட்சிகளிலும் சேர்பவர்கள், ஏதாவதொரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் சேர்கிறார்கள். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. எந்த தொண்டர்களும் விதிவிலக்கல்ல. தொண்டர்களில் ஆயிரத்தில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரம்பிக்கிறோம் என்பதும், அதே காரணத்தை சொல்லி கட்சியில் தொண்டர்கள் இணைவதும் வெறும் நகைச்சுவையே.

தன் உழைப்பில் தான் வாழனும் என்று நினைப்பவர் எவரும் அரசியலுக்கு போக மாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள், தங்கள் சுய உழைப்பாலும், சுய உழைப்பில் வந்த பணத்தாலும் சேவை செய்ய வேண்டும். சேவை மனப்பான்மை உள்ள ஒவ்வொருவரும், ஐந்து பேருக்கு உதவினாலே போதும். நாடு நலமாகி விடும். நிதி வசூலித்து சேவை செய்கிறோம் என்கிற இடத்தில்தான், ஊழலின் ஊற்றுக்கண் திறக்கிறது

இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Leave a Reply