அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி: நெட்டிசன்கள் விளாசல்

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு திடீரென அமித்ஷாவை சந்தித்த பின்னர் போட்டியிட போவதில்லை என பின்வாங்கியதை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த பின்னர் பேட்டியளித்த அய்யாக்கண்ணு, ‘நதிகளை இணைப்போம், விவசாயிகள் வாழ்வாதாரம் காப்போம் என அமித்ஷா உறுதி அளித்ததின் பேரில் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார். இதே உறுதிமொழியைத்தான் நூறு நாட்கள் போராடியபோதும் மோடி அளித்தார். ஆனால் அப்போதெல்லாம் கேட்காத அய்யாக்கண்ணு இப்போது மட்டும் கேட்டுக்கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இவர் போன்ற ஆட்களுக்கு எல்லாம் ஆதரவாக பேசி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மதிப்பை குறைத்து கொண்டதாகவும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Comments

  1. sathasivam periyasamy    

    அய்யாக்கண்ணு ஒரு விவசாயி என்று நினைக்காதீர்கள் . அவர் ஒரு ஜமீன்.

  2. sathasivam    

    அய்யாக்கண்ணு ஒரு விவசாயி என்று நினைக்காதீர்கள் அவர் ஒரு ஜமீன்.
    ஜமீனும் ஜமீனும் சந்திச்சுக்கிட்டாங்க மேட்டர் ஓவர்.

Leave a Reply