அயோக்யா’ ரிலீஸ் தேதி தள்ளி போனது ஏன்?

விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரலில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மே மாதத்திற்கு சென்றுவிட்டது.

‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தேர்தல், ஐபிஎல், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆகியவை அனைத்தும் முடிந்து சரியான கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட்மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது

Leave a Reply