shadow

அமெரிக்க வரலாற்றில் முதல் 100 நாட்களில் இதுதான் சிறந்த நிர்வாகம். டிரம்ப் பெருமிதம்

 அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அதிபரும் தர முடியாத நல்லாட்சியை இந்த 100 நாட்களில் தந்துள்ளேன். இது ஆரம்பம்தாம், போகப்போக இன்னும் தொடரும் என்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பெருமிதமாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆவதை அடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

முதல் 100 நாட்களில் எனது நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கியுள்ளதாக நம்புகிறேன். இந்த குறுகிய காலத்தில் எனது அரசாங்கம் வேலை வாய்ப்புகளை மீண்டும் திரும்பி கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா மிக வேகமாக வளர்ச்சி காணும் என்று உறுதி அளிக்கிறேன். நிறுவனங்களும் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. இது வெறும் ஆரம்பம்தான். நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரிய அளவில் வரிச் சலுகை அளிக்கப்படும். அமெரிக்க ெதாழிலாளர்களுக்காக எனது அரசு போராடுகிறது. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் அமெரிக்க மக்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தை எனது அரசு ரத்து செய்தது.

அமெரிக்கா இதுவரை மேற்கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தம் உள்பட அனைத்து சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களையும் மறுஆய்வு செய்வது தொடர்பான நிர்வாக உத்தரவில்  அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தங்களில் விதிமீறல்கள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். இந்த உத்தரவு பிரச்னை வெளியே கொண்டு வருவதுடன், அதற்கான மாற்று தீர்வையும் வழங்கும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Reply