shadow

அமெரிக்காவுக்கு போர் மூலம் சரியான பதிலடி கொடுப்போம்: வடகொரியா

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை இருக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் வடகொரியாவை ஒட்டி உள்ள பகுதிகளில் பறந்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதை சீனாவும், வடகொரியாவும் கண்டித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய வெளியுறவு மந்திரி ரியாங்கோ சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவை கடுமையாக மிரட்டி உள்ளார். நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அதற்கு தயாராகி விட்டோம்.

டொனால்டு டிரம்ப் மனநிலை பாதித்தவர் போல் செயல்படுகிறார். இதனால் தான் எங்களை மிரட்டுவதற்காக ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவை விட மாட்டோம்.

Leave a Reply