shadow

அமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார்

அமெரிக்காவிலேயே அதிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயது ரிச்சர்ட் ஓவர்டன் என்பவர் இன்று காலமானார். கடந்த 1906-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி டெக்சாஸில் பிறந்த இவர் 2-ம் உலகபோரில் இவர் ராணுவ வீரராக பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு மாதமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அமெரிக்காவின் மிக வயதான நபர் காலமானதை அறிந்து அமெரிக்க மக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply