shadow

அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்

மழை, வெள்ளம் உள்பட பலவேறு தட்பவெப்ப சூழ்நிலை இருக்கும் காரணத்தால் அமர்நாத் யாத்திரையை சில நாட்கள் ஒத்திவைக்குமாறு பக்தர்களுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் பக்தர்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

இந்த நிலையில் அம்ர்நாத் புனித யாத்திரை அமைப்பின் உறுப்பினரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூருகையில், ‘பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இங்கு நிலவும் மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் தங்கள் யாத்திரை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply