அமமுகவின் முக்கிய நிர்வாகியாக நடிகர் செந்தில் நியமனம்

தினகரனின் அமமுகவில் இருந்து அவ்வப்போது தலைவர்கள் மாற்றுக் கட்சிகளில் மாறி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில்கூட செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதேபோல் அதிமுகவிலும் ஒருசில தலைவர்கள் இணைந்து வருவதால் அமமுகவின் கூடாரம் காலியாகி விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்

இந்த நிலையில் அமமுக அமைப்பு செயலாளர்களாக நடிகர் செந்தில் உள்பட 5 பேர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் நியமனம் செய்துள்ளார்

நடிகர் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதும் அவருக்கு தற்போது பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply