shadow

அப்பளப்பூ குழம்பு

14
என்னென்ன வேண்டும்?

அப்பளப்பூ – 10

பாசிப் பருப்பு – கால் கப்

தக்காளி – 1

சின்ன வெங்காயம் – 6

மிளகாய்த் தூள் – 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம்- ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பைக் குழைய வேகவைத்துத் தனியே வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலைக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அப்பளம் அல்லது கூழ் வற்றலைப் பொரித்துத் தனியே எடுத்துவையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். அதில் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் வெந்த பருப்பு, தேங்காய் விழுதைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேருங்கள். இந்தக் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

Leave a Reply