அனிருத்தின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனிருத் இசையமைத்த ‘பேட்ட’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் அவர் இசையமைத்த அடுத்த படமான ‘தும்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் மட்டுமின்றி அவருடன் விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களும் இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகன் கீர்த்தி பாண்டியன், தர்ஷன், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது

Leave a Reply