அத்தி வரதர் வைபவத்தால் ரூ.1.5 கோடி வசூல் செய்த போக்குவரத்து துறை

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகர் முழுவதும் 45 மினிபேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டதாகவும் அப்படி இருந்தும் இதன் மூலம் போக்குவரத்து துறைக்கு 32 நாட்களில் ரூ.1.50 கோடி வசூல் ஆனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மினி பேருந்து மூலம் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படுவதால் காத்திருக்காமல் பயணிக்க முடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 32 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் கோயிலுக்கு பேருந்து மூலம் பயணித்ததால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply