shadow

அதிமுக 20 தொகுதிகளிலும் டெபாசிட்கூட வாங்காது: டிடிவி தினகரன்

இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிமுக 20 தொகுதிகளிலும் டெபாசிட்கூட வாங்காது என்பதால் நானும் முக ஸ்டாலினும் ரகசிய சந்திப்பு செய்ததாக மலிவான அரசியல் செய்து வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நான் மதுரை சென்றால் எப்போதுமே அந்த தனியார் ஓட்டலில்தான் தங்குகிறேன். நான் தங்கியிருந்த அதே நாளில் ஜி.கே.வாசனும்கூட அந்த ஓட்டலில்தான் தங்கியிருந்தார். ஸ்டாலின் அங்கு தங்கியிருப்பது எனக்கு இரவுக்கு மேல்தான் தெரிந்தது. ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததால் ரகசிய சந்திப்பு என்று கூறுவதெல்லாம் நியாயமா? இதை வைத்து எல்லாம் விவாதம் தேவையா? ரஃபேல் போர் விமான சர்ச்சை குறித்து விவாதித்திருந்தால் நான் வரவேற்றிருப்பேன்.

நான் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தாலே போதும் நான் யாரை சந்தித்தேன் என்பது தெரிந்துவிடும். அதைவிடுத்து இதை விவாதிக்கிறார்கள். சரி, நான் அண்மையில் திருவண்ணாமலையில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அன்று வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தமிழக பாஜக தலைவரும் அதே ஓட்டலில் தங்கினார். அதனால், அன்று நாங்கள் ரகசிய சந்திப்பு நடத்தினோம் என்பீர்களா?

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply