shadow

அதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளதாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. அந்த கட்சிக்கு அதிமுக கூட்டனியில் 7 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவுக்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ, அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளதாகவும், கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூற வராதவர் பிரதமர் மோடி, அவருடன் எப்படி அதிமுக கூட்டணி வைக்க சம்மதித்தது என்றும் கூறியுள்ளார். மேலும் அதிமுக-பாமக கூட்டணி மக்களுக்கு எதிரானது என்றும், தமிழர் நலனுக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply