shadow

அதிமுக தொடங்கியபோது ரஜினி பரட்டையாக இருந்தார்: அமைச்சர் சண்முகம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று வேண்டுமானால் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அதிமுக தொடங்கப்பட்டபோது அவர் வெறும் பரட்டையாகத்தான் இருந்தார் என அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினி பரட்டையாக இருந்தபோது மோடியும் ஓ.பன்னீர்செல்வமும் டீக்கடைக்காரர்களாக இருந்திருப்பார்கள். அமைச்சர் சண்முகம் என்னவாக இருந்திருப்பார் என்றே தெரியாது. அதேபோல் இப்போதுள்ள அதிமுக அமைச்சர்கள் அவர் பரட்டையாக இருந்தபோது என்னவாக இருந்திருப்பார்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சமகாலத்தில் உள்ள ரஜினியை எதிர்ப்பதை விட்டுவிட்டு யாராவது 40 வருஷத்துக்கு முன்னாடி போய் விமர்சிப்பார்களா? அப்படி விமர்சிப்பதும் சரியா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply