shadow

அதிமுக-தேமுதிக கூட்டணியில் இழுபறி: தினகரன் அணிக்கு செல்லுமா தேமுதிக?

அதிமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டுவருவதால் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது

அதிமுக தரப்பில் இருந்து 4 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு தர சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், அதிலும் தேமுதிக கேட்ட முக்கிய தொகுதிகள் கிடையாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் தேர்வு செய்த 7 தொகுதிகள் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருப்பதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் டிடிவி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது

Leave a Reply