அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை: டிடிவி தினகரன் உறுதி

22 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவில்லை என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக குறைந்தது ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் அமமுக ஆதரவு இல்லை என டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply