காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் மாநில கட்சிகளின் முயற்சி தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதிமுக உள்பட 11 கட்சிகள் இணைந்திருக்கும் இந்த 3வது கூட்டணி நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவு எடுத்துள்ளது.

இன்று டெல்லியில் இடதுசாரி கட்சிகள், அதிமுக, சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜனதா தளம் உள்ளிட்ட 11 கட்சிகளின் முக்கிய தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தம்பிதுரை, தேவகவுடா, கே.சி.தியாகி, சீதாராம் யெச்சூரி, ராம் கோபால் யாதவ் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்பதிலும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்கவேண்டும் என்றும், நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவசர அவசரமாக தாக்கல் செய்யும் மசோத்தாக்களை எதிர்க்கவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply