அதிமுகவை விஜய்யால் அசைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சீமான் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் என்றும் அமைச்சர் கூறினார்.

ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் என்றும் நேற்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்து கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் அவர்களது பெயரை அரசியல்வாதிகள் இழுப்பது வம்பை விலை கொடுத்து வாங்குவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply