அதிமுகவில் சேருகின்றாரா கராத்தே தியாகராஜன்?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த கராத்தே தியாகராஜன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் செய்த முக ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து கராத்தே தியாகராஜன் இன்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் காராத்தே தியாகராஜன் எங்களுக்கு விரோதியோ, எதிரியோ , துரோகியோ அல்ல என்றும், அவர் அதிமுகவிற்கு வர விருப்பப்பட்டால் அது குறித்து கட்சி முடிவு எடுக்கும் என்றும், நாங்கள் கட்சியில் சேர்க்கக்கூடாத பட்டியலில் கராத்தே தியாகராஜன் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply