அதிமுகவில் இணைந்த இரண்டு தமிழ் நடிகர்கள்

தேர்தல் நேரங்களில் நடிகர்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து பிரச்சாரம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக ஒருசில நடிகர்கள் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, திரைப்பட நடிகர்களான திரு.M.விஜய்கணேஷ் மற்றும் திரு.V.M.சுப்புராஜ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து, அஇஅதிமுக கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளருக்காக வாக்கு சேகரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply