அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 5ஆம் தேதி வெளியானது என்பதும் அந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 10 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியாக இருப்பதாகவும் இதில் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஒரு சில அமைச்சர்கள் தவிர மற்ற அமைச்சர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் தான் போட்டு விடுகின்றனர் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் இன்று தேமுதிக மற்றும் தமாக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply