shadow

அதர்வா முரளியின் ‘பூமராங்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள ‘பூமராங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஏற்கனவே முடிந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில் பிரசன்னகுமார் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

 

Leave a Reply