அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

நேற்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி அதில் திமுக கூட்டணிக்கு சுமார் 25 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்தியில் பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பொருளாளர் துரைமுருகன் ,முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆ.ராசா ஆர்.எஸ்.பாரதி சண்முகநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தேர்தலுக்கு திமுக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது

Leave a Reply